JobVibe.lk - Sri Lanka Job Portal

மு.கா தலைவரின் உத்தரவை மீறிய மு.காவின் மூன்று இறக்காம பிரதேச சபை உறுப்பினர்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த இறக்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.


இறக்காமம் பிரதேச சபையின்  அமர்வு இன்று (13) தவிசாளர் ஜெமில் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றபோது  2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 


இதன்போது, வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும், எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 


வரவு செலவுத்திட்டத்திற்கு  ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உபதவிசாளர் நௌபர் மௌலவி, அன்வர், பாஹிமா, பொதுஜன பெரமுன கட்சியின் சிறியலதா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர் ஜெமில் காரியப்பர், நிர்மலா ஆகியோர் வாக்களித்தனர்.


வரவு செலவுத்திட்டத்திற்கு  எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் தவிசாளர் கலிலுர் றஹ்மான், றபாய்டீன், சுலைஹா, சுல்பிகார் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியின் ஆஸிக், நைஸர், முஸ்மி ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.


இதன் மூலம் இறக்காமம் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்தது.


குறித்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்களுக்கு மு.கா தலைவரினால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடிதமும் அனுப்பப்பட்டு, 2022.12.12 ஆம் தகதி இரவு முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பை தலமையில் குழு ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.


குறித்த வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்குமாறு மு.காவின் மூன்று உறுப்பினர்களுக்கு சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் இறக்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஜே.கலிலுல் றஃமானால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.


முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சிகளின் கூட்டில் உள்ள இறக்காமம் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தமையே வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணமாகும்.


இறக்காமம் பிரதேச சபையில் மொத்தமாக 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال