Breaking News

மொனறாகலை மாவட்டத்தின் பகினிகஹவெல அண்டிய கிராமங்களுக்கு சீரற்ற காலநிலையால் பாதிப்பு!.

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட தாழமுக்கத்தின் விளைவாக மொனறாகலை மாவட்டத்தில் உள்ள  பகினிகஹவெல அண்டிய கிரமாங்களுக்கு  இன்று (08) அதிகாலை முதல் ஏற்பட்ட  கடும்  காற்றின் காரணமாக பொது மக்களின் வீடுகளுக்கு மரங்கள்  குடை சாய்ந்து பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. பாதைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன்,  மதஸ்தளங்களிலும் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டுளளன. 


இதேவேளை பாதிப்படைந்தவர்களுக்கு பகினிகஹவெல பள்ளிவாசல் நிர்வாகம், பகினிகஹவெல ஜனாஸா நலன்புரிச் சங்க உறுப்பினர்கள்,  பொது மக்கள் ஆகியோர்  இணனந்து  சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு சென்று உதவிகளை வழங்கினர். 


இக்காலநிலை சீற்றத்தின் காரணமாக பாடசாலைகளுக்கான மாணவர் வருகை குன்றியதாக காணப்பட்டது.


மேலும் இக்காலநிலை மாற்றம்  பதுளை, லுனுகளை, பஸ்ஸரை போன்ற பிரதேசங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுளது.


 

ஏ.எச்.எம் சிஹார் 

பகினிகஹவெல, மொனறாகலை










No comments