JobVibe.lk - Sri Lanka Job Portal

அஸ்மியா நிஸாம் எழுதிய "மனிதம் இல்லா பூமி" கவிதை நூல் அறிமுக விழா

(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்)

கரவாகு கலை இலக்கிய மன்றம் மற்றும் வியூகம் வலையமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் அக்குறனை அஸ்மியா நிஸாம் எழுதிய "மனிதம் இல்லா பூமி" கவிதை நூல் அறிமுக விழா மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் கரைவாகு கலை இலக்கிய மன்றத்தின் தலைவரும், கலைஞருமான எஸ்.ஜனூஸ் தலைமையில் (12) சனிக்கிழமை இடம் பெற்றது.


நூலின் நயவுரையினை கவிதாயினி சித்தி மசூராவும்,  நூல் விமர்சனத்தினை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸாவும், நூலின் வாழ்த்துரையினை சர்வதேச மாற்றத்திற்கான பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் ரிஷாத் ஷரீப், அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா, சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவர் முனைமருதவன் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகியோர் நிகழ்த்தினர்.


இந் நூல் அறிமுக நிகழ்வில் இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், சாய்ந்தமருது பிரதேச செயலக முன்னாள் செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


மேலும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ், பாலமுனை ஹோமியோபதி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எம்.முனீர் அபூபக்கர், மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம் அஸ்மி, மருதம் கலைக்கூடல் மன்ற தலைவர் கலைஞர் அஸ்வான் எஸ்.மௌலானா, துணிந்தெழு நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.நஸ்றீன் பாஸித் உட்பட கலை, இலக்கிய பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கண்டி மாவட்டம் அக்குறனையை  சேர்ந்த அஸ்மியா நிஸாமின் முதலாவது வெளியீடான "மனிதம் இல்லா பூமி"  எனும் இந்நூல் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் நினைவரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال