JobVibe.lk - Sri Lanka Job Portal

மழைக்கு மத்தியிலும் QR Code முறை மூலம் எரிபொருள் விநியோகம்

 பாறுக் ஷிஹான்

அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code    திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு   எரிபொருள்  விநியோகிக்கப்பட்டு வருகின்றன.


கல்முனை  ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு    நிலையம் மற்றும் கல்முனை பி.எம்.கே.ரஹ்மான் எரிபொருள் நிலைய  முகாமைத்துவ பணிப்பாளர்கள் முகாமைத்துவ பணிப்பாளர்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய  QR Code  முறை மூலம் கடும் மழைக்கு மத்தியில் இன்று காலை முதல் மாலை வரை பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரும்   முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரும்  சொகுசு கார் வாகனங்களுக்கு 20 லீட்டரும் எரிபொருள் வழங்கப்பட்டது. அத்துடன் டீசல் எரிபொருளும் கடும் மழைக்கு மத்தியில் சீராக இதே போன்று இவ்வெரிபொருள் நிலையங்களில் விநியோகம் செய்யப்பட்டன.


அத்துடன் கரப்பிணிகள், மத தலைவர்கள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் ,நோய் பிணியாளர்களுக்கும் இடையிடையே முன்னுரிமை வழங்கப்பட்டு எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


மேற்படி எரிபொருள்கள் விநியோகம் செய்யப்படும் செயற்பாட்டிற்குகடும் மழைக்கு மத்தியில்  கல்முனை பொலிஸார் பாதுகாப்பு வழங்கி இருந்ததனர்.


எனினும்   இன்னும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாக பின்பற்றப் படாமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال