JobVibe.lk - Sri Lanka Job Portal

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும்அபிவிருத்தி நடவடிக்கைகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி (Hideaki Mizukoshi) தெரிவித்துள்ளார்.

இன்று (01) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை தொடர்ந்து பேணுவதாகவும் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்தார்.

இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி அவர்கள் தூதுவருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال