JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம்: மஹ்ரூப் சம்சுதீன் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

 ரஸீன் ரஸ்மின்

புத்தளத்தைச் சேர்ந்த மஹ்ரூப் சம்சுதீன், அகில இலங்கை சமாதான நீதவானாக, புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் அசேல த சில்வா முன்னிலையில் கடந்த 5 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.



இவர் , கஹட்டகஸ்திகிலியவைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகாவும் கொண்டவர்.



கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) ஆரம்பக் கல்வி முதல் சாதாரணம் வரை கல்வி கற்றதுடன், மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் உயர் கல்வியை தொடர்ந்துள்ளார்.



பட்டதாரியான இவர், பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசவியல் துறையில் இளமானி பட்டப்படிப்பையும் , முதுமானி பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.



அத்தோடு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஏழு வருடங்களாக சமூக விஞ்ஞான துறை விரிவுரையாளராக கடமையாற்றி வந்த இவர் , 15 வருடங்களுக்கு மேல் தன்னார்வ நிறுவனங்களோடு இணைந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். 



இவர் மர்ஹூம்களான முஹைதீன் சம்சுதீன் மற்றும் லைலா உம்மா தம்பதிகளின் புதல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال