JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நகர சபை உறுப்பினர்களால் அரசுக்கெதிரான கவயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு!.

புத்தளம் நகரசபை உறுப்பினர்களால் அமைதியான முறையில் அரசுக்கெதிரான கவனயீர்ப்புப் பேரணி இன்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் அவர்களின் ஒருங்கமைப்புடன் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


எரிபொருள் மற்றும் அத்தியவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டால் ஏற்படப் போகும் விபரீத நிலைமை, அரசின் மெத்தனப் போக்கான நிர்வாகம், ஜனநாயக விரோதப் போக்கு போன்ற பல விடயங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக் காட்டினர்.


கொழும்பு முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து பேரணியாக நகர மத்திய வீதி ஊடாக ச்சென்று இன்று புத்தளம் நகரசபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு நடைபெற்ற பொதுசன நூலக வளாகத்தைச் சென்றடைந்தது.


சபை அமர்விலும் பெரும்பாலான நகரசபை உறுப்பினர்கள் இணைந்து அரசுக்கெதிரான சுலோக அட்டைகளைத் தாங்கியவண்ணம் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.





















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال