JobVibe.lk - Sri Lanka Job Portal

அழுத்தங்கள் வேண்டாம் பணிகளை தொடருங்கள் அமைச்சர் வீரவங்ச அதிபர் ஆசிரியர்களிடம் வேண்டுகோள்.

5000 ரூபாய் அமைச்சர் பெசிலின் மனித நேய அன்பளிப்பு வரலாற்றில் கணக்கில் எடுக்கப்படாத பல சலுகைகள் முன்வைப்பு


கோவிட் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிபர் ஆசிரியர்களுக்கு கணிசமான வீதங்களில் சம்பள அதிகரிப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.


சம்பள அதிகரிப்புடன் இச்சேவைகளை இணைந்த சேவைகளாக  மாற்றி இவற்றின் சலுகைகள்  அனைத்தும் ஆறு மாத காலத்தினுள் அதிபர் ஆசிரியர்களுக்கு கிடைக்கும்.


எம்மால் முடிந்ததை வழங்கியிருக்கிறோம் எனவே அதிபர் ஆசிரியர்கள் மாணவ சமூகத்தின் நலன் கருதி தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.


சம்பள அதிகரிப்பு யோசனைகளுக்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ள 5000 ரூபா கொடுப்பனவை மனித நேய அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாமாகவே முன் வந்தார் இது அமைச்சரவை உபகுழுவின் தீர்மானம் அல்ல எனவும் அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர் அமைச்சர் விமல் வீரவங்ச ஆசிரியர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال