JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆசிரியர்களுக்கு இழுக்கை ஏற்படுத்தும் தொலைக்காட்சி சேவையிலிருந்து நடிகர் விலகினார்

ஆசிரியர்களை கேவலப்படுத்தும் நிந்திக்கும் இடத்தில் என்னால் தொடர்ந்து இருக்க முடியாது


ஸ்ரீலங்கா சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் கோப்பிகடே நகைச்சுவை நாடக நிகழ்ச்சியில் "சோமதாச" பாத்திரத்தில் கடந்த 35 ஆண்டுகளாக நடித்து வந்த பிரபல கலைஞர்  இந்நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.


தொலைக்காட்சி நிறுவனத்தின் கோப்பிகடே நகைச்சுவை நிகழ்ச்சியில் ஆசிரியர்களை கேவலமாக சித்தரித்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதை ஆட்சேபித்து தான் இந்நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அவர் ஒலிநாடா ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.


தான் தெய்வங்களாக மதிக்கும் ஆசிரியர்களை நிந்தித்து கேவலப்படுத்தி தரங்குறைத்து நிகழ்ச்சி வெளியிடும் இவ்வாறான ஒரு இடத்தில் தன்னால் மனசாட்சியுடன் சேவை செய்ய முடியாது என்பதால் தான் இவ்வாறு விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை ஆசிரிய சமூகமும் மாணவ சமூகத்தின் நலன் கருதி முடியுமானால் நிகழ்நிலை வகுப்புக்களை தொடர்வது குறித்து தமது நிலைப்பாட்டை மீளாய்வு செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال