JobVibe.lk - Sri Lanka Job Portal

மாவடிப்பள்ளி பாடசாலைக்கு சர்வதேச தொண்டு நிறுவன அனுசரணையில் இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும்.

மாளிகைக்காடு- நூருல் ஹுதா உமர்

ஜோர்தான் நாட்டின் ஸம்-ஸம்  சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் மாவடிப்பள்ளி கமு/ கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு  நீர்தாங்கியும் இலவச நீர்வழங்கலும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.


பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களினதும், பொதுமக்களினதும் குடிநீர் தேவையை போக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும் இவ்  அமைப்பினால் கடந்த பல மாதங்களாக நிர்மாணித்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகிறது.


இதன் ஒரு கட்டமாக ஒரு லட்சம் ரூபா செலவில் மாவடிப்பள்ளி கமு/ கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தை இன்று  (25) பைத்துல் ஹெல்ப் அமைப்பின் தலைவர் எம்.எச். ரைஸுல் ஹக்கீம் மாணவர்களிடம் பாவனைக்காக கையளித்தனர். இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال