JobVibe.lk - Sri Lanka Job Portal

அதாஉல்லாஹ் விளையாட்டு மைதானத்தின் கரப்பந்தாட்ட திடலை அபிவிருத்தி செய்யும் நிகழ்வு !

நூருல் ஹுதா உமர் 

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில் இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் பிரதேச செயலகத்திற்கு ஒரு மைதான அபிவிருத்தி எனும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச சபை அதாஉல்லாஹ் விளையாட்டு மைதானத்தின் கரப்பந்தாட்ட திடலை அபிவிருத்தி செய்யும் நிகழ்வு இன்று (10) அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராஸிக், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.ரஸான், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், பிரதேச சபை அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள்,விளையாட்டு கழக வீரர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال