JobVibe.lk - Sri Lanka Job Portal

"கல்முனை பிரதேச செயலாளராக ஜெ.லியாக்கத் அலி நியமனம்."

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலாளராக ஜெ.லியாக்கத் அலி இன்று(01) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றவுள்ளர்.என்பதோடு இவருக்கான நியமனம் அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டது.


இலங்கை நிர்வாக சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த ஜெ.லியாக்கத் அலி காரைதீவு,சம்மாந்துறை பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும்,ஓட்டமாவடி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும்,கல்முனை மாநகர சபையில் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்,உதவி திட்டமிடல் எம்

ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம் கலீல்,கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதிருத்தீன்,பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال