JobVibe.lk - Sri Lanka Job Portal

பஹ்ரைனின் புதிய பிரதமராக `ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா.

உலகின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பஹ்ரைன் பிரதமர் காலிபா பின் சல்மான் அல் காலிபா (Khalifa bin Salman Al Khalifa) தனது 84 வது வயதில் அமெரிக்காவில் நேற்றைய தினம் காலமானார்.

இந் நிலையில் பஹ்ரைனின் புதிய பிரதமராக, இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா (Sheikh Salman bin Hamad al-Khalifa) நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிலும் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஹமாத் துணைப் பிரதமராக பணியாற்றியுள்ளார்.

மேலும் பஹ்ரைனின் பாதுகாப்புப் படையின் துணை தளபதியாக இருந்தார். சர்வதேச நாடுகளுடன் இணக்கமாகவே செல்ல விரும்பும் ஹமாத்தினால் அந்நாட்டு வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال