கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி ! முஸ்லிம்கள் செரிவாக வாழும் பகுதியை தெரிவு செய்ய உத்தரவு !!
அல்ஹம்துலில்லாஹ்
கொரோனாவினால் மரணிப்பவர்களை, நல்லடக்கம் செய்யவும் முடியும் என்ற அனுமதியை சுகாதார துறை வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
அரசின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இதனை மடவளை நியுசுக்கு சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களின் முயற்சியினால் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
நாட்டின் எந்தப் பகுதியிலும்,முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும்,அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம்கள் செரிவாக வாழும் ஒரு பகுதியை தெரிவுசெய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதற்காக மன்னார் மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தினை தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டதாக இன்றைய 09.11.2020 அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த கெபினட் அமைச்சர் சற்றுமுன்னர் உறுதிபடத்தெரிவித்தார்.
தகவல்
அஷ்ஷெய்ஹ் றிஸ்வி முப்தி
(தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)
No comments