JobVibe.lk - Sri Lanka Job Portal

தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு..

(சர்ஜுன் லாபீர்)

கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌சவினால் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதனடிப்படையில் கல்முனையில் தற்போது கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பத்துருத்தின் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா கலந்து கொண்டு கிராம சேவர்களிடம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.அத்தோடு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சானும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال