JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்....

(சர்ஜுன் லாபீர்)

கல்முனையில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மீலாத் நபி விழா கொடிகட்டிப் பறக்கும் கொண்டாட்டங்கள் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமைந்திருந்தும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொது மக்கள் கடுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

கல்முனை பிரதேசத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கும் அத்தனை வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
மிக அத்தியாவசிய தேவையை தவிர ஏனையோர் அனைவரும் வீட்டிலேயே இருப்பதை காண முடிகின்றது .
இதே ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்குமேயானால் இந்த கொடிய நோயை எமது பிராந்தியத்தில் இருந்து முற்றாக ஒழித்து விடலாம்.

இவ்வகையான ஒத்துழைப்புகளை வழங்கிய கல்முனை வாழ் பொது மக்களுக்கு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ ரிஸ்னி நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال