JobVibe.lk - Sri Lanka Job Portal

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விபரம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.


கண்டியில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வின் முதலில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர், 40 இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

  1. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பாதுகாப்பு அமைச்சர்
  2. பிரதமர் மஹிந்த ராஜபக்ச - நிதி, புத்தசாசன, மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
  3. நிமல் சிறிபால டி சில்வா - தொழிற்துறை அமைச்சர்
  4. ஜீ.எல்.பீரிஸ் - கல்வி அமைச்சர்
  5. பவித்ரா வன்னியாரச்சி - சுகாதார அமைச்சர்
  6. தினேஷ் குணவர்தன - வெளி நாட்டு விவகார அமைச்சர்
  7. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் அமைச்சர்
  8. காமினி லொகுகே - போக்குவரத்து அமைச்சர்
  9. பந்துல குணவர்தன - வர்த்தகத்துறை அமைச்சர்
  10. சி.பி.ரத்நாயக்க - வன வாழ்வு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்
  11. ஜனக பண்டார தென்னகோன் - பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர்
  12. கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகத்துறை அமைச்சர்
  13. சமல் ராஜபக்ச - நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
  14. டளஸ் அழகப்பெரும - வலு அமைச்சர்
  15. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - நெடுஞ்சாலைகள் அமைச்சர்
  16. விமல் வீரவன்ச - கைத்தொழில்துறை அமைச்சர்
  17. மஹிந்த அமரவீர - சுற்றுலாத்துறை அமைச்சர்
  18. எஸ்.எம்.சந்ரசேன - காணி அமைச்சர்
  19. மஹிந்தானந்த அழுத்கமகே - விவசாய அமைச்சர்
  20. வாசுதேவ நாணாயக்கார - நீர் வழங்கல் அமைச்சர்
  21. உதய கம்மன்பில - சக்தி அமைச்சர்
  22. ரமேஷ் பதிரண - தோட்டத்துறை அமைச்சர்
  23. பிரசன்ன ரணதுங்க - சுற்றுலாத்துறை அமைச்சர்
  24. ரோஹித அபேகுணவர்தன - துறைமுக அமைச்சர்
  25. நாமல் ராஜபக்ச - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
  26. அலி சப்ரி - நீதி அமைச்சர்



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال