JobVibe.lk - Sri Lanka Job Portal

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியானது


கட்சித் தலைவர் பங்குபெறும் கூட்டத்தில் உச்சபட்சம் 500 பேர்

ஏனைய கூட்டங்களில் உச்சபட்சம் 300 பேர்

கூட்டத்திற்கு வருகை தருவோரின் பெயர், விபரம் பதிவிடப்பட வேண்டும்.

பேச்சாளர் உட்பட இரு நபர்களுக்கிடையே ஒரு மீற்றர் இடைவெளி அவசியம்.

பயன்படுத்தப்படும் ஒலிவாங்கி உள்ளிட்ட சாதனங்கள் தொற்று நீக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இலக்கம் 2184/34 எனும் குறித்த அதி விசேட வர்த்தமானி, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால், வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச்சட்டத்தின் 2ஆம் 3ஆம் பிரிவுகளின் கீழ்
பொதுத் தேர்தல் கூட்டமொன்றை ஏற்பாடு செய்தல், கலந்து கொள்ளுதல்
வாக்கு வேண்டி வீடுகளுக்கு செல்லுதல்
வேட்பாளரின் தேர்தல் அலுவலக நடைமுறைகள்
வாக்களித்தல், வாக்கெண்ணுதல் நடவடிக்கை தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال