JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கையின் தலை சிறந்த கல்விமான் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி காலமானார்

இலங்கையின் தலை சிறந்த கல்விமானும், ஜாமியா நழீமியா கலாபீடத்தின் பணிப்பாளருமான கலாநிதி சுக்ரி அவர்கள் இன்று காலமானார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ஜாமியா நளீமியாவின் பணிப்பாளரும் அதன் உருவாக்கத்திற்கு அன்று நளீம் ஹாஜியாருடன் இணைந்து பணியாற்றியவருமான, இஸ்லாமிய அறிஞர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் 80 வது வயதில் இல்லத்தில்  வபாத்தானார்கள்.

கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி எம்.ஏ.எம்.சுக்ரி (1940 ஜூன் 24) பிறந்த இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் அறிஞர்களில் ஒருவர். 

இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்து கொண்டிருப்பவர்.

சுக்ரி தென் மாகாணத்தில், மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தீஞ்சுவைசொட்டும் நல்ல பேச்சாளரான இவர், ஆரம்ப காலத்தில் கவிதை, சிறுகதை என்பவற்றில் ஈடுபாடு காட்டியுள்ளார். பிற்காலத்தில் சமய இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு சமய இலக்கியங்களைத் தந்துள்ளார். இங்கிலாந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சூபித்துவத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இலங்கையில் காணப்படும் முன்னோடி இசுலாமியப் பல்கலைக்கழகமான ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். இவரது நூல்கள் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வில் குறிப்பிடத்தக்கவையாகக் கருதப்படுகின்றன.

இவரது ஆக்கங்கள் ஈழத்தில் மட்டுமன்றி பிறநாட்டுச் சஞ்சிகை, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. பன்மொழிப் பாண்டித்தியம் மிக்கவர். 'இஸ்லாமிய சிந்தனை' என்ற ஆய்வுச் சஞ்சிகையின் ஆசிரியராவும் இவர் பணியாற்றியுள்ளார்.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال