JobVibe.lk - Sri Lanka Job Portal

கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகளிற்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், 8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களில், குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு குழந்தைகளுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஏனையோர் தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் வெளியே செல்லுமாறும், வீணாக வெளியே சுற்றித்திரிவதை தடுக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال