JobVibe.lk - Sri Lanka Job Portal

அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் கால, நேரங்கள்

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதாவது மார்ச் 24 காலை 6.00 மணிக்கு நீக்கப்படும்.

இந்த மாவட்டங்களில் நாளை (24) நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், அது 27 வெள்ளிக் கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் 27 நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்.

ஏனைய மாவட்டங்களில் இன்று (23) பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும். அது 26 வியாழன் காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன், அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

01 நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

02 வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

03 ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

04 அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.

விவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال