JobVibe.lk - Sri Lanka Job Portal

ஹொரவப்பொத்தானை பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு விளக்கமறியல்


தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை விடுவிக்குமாறு கோரி ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த நபர் தனது உறவினரை விடுவிப்பதற்காக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட வேளையில் கடந்த 5ம் திகதி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال