JobVibe.lk - Sri Lanka Job Portal

அமெரிக்க-ஈரான் பதற்றம் அதிகரிப்பு, பாரசீக வளைகுடா விமானங்களுக்கு எச்சரிக்கை


அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருவதால், பாரசீக வளைகுடா வான்வெளியில் பயணம் செய்யும் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதனால், பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் நாட்டுப் போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியம் அருகேயுள்ள 4 எண்ணெய்க் கப்பல்கள் மற்றும்  சவூதி அரேபியாவிலுள்ள எண்ணெய்க் குழாய்கள் என்பன தாக்குலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இத்தாக்குதலுக்கு ஈரானுடன் தொடர்புடைய ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இத்தாக்குதல்கள் அனைத்துக்கும் ஈரானே முக்கியக் காரணம் என்று சவூதி அரேபியா தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகிறது.
இதனிடையே, அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் மிரட்டல் விடுத்துவருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  
Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال