JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் உள்ள பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கான விவாதப் போட்டி நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் வடமேல் மாகாண சபையின் நிதி ஒதுக்குட்டின் கீழ் கற்பிட்டி பாடசாலைகள் மற்றும் நூலகங்களுக்கான விவாதப் போட்டி நிகழ்வு வியாழக்கிழமை (05); கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ்,  உப தவிசாளர் சமன் குமார ஹேரத் மற்றும் மண்டலகுடா வட்டாரத்தின் உறுப்பினர் சுவிஸ் பைசல் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மாணவர்களின் பேச்சாற்றல், சிந்தனைத்திறன், அறிவாற்றல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் வகையிலும் இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த நிகழ்வு சகலரினதும் பாராட்டை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال