எம்.யூ.எம்.சனூன்
அண்மையில் நடந்து முடிந்த மாகாண மட்ட சிங்கள தினப் போட்டியில் தரம் 7 ஐச் சேர்ந்த ஏ.சி. ஹன்பா என்ற மாணவி மொழிப் பிரயோகம் மற்றும் கிரகித்தல் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளார்.
பாடசாலை அதிபர் எஸ்.எல். அன்வர் மற்றும் பாடசாலை பிரதி அதிபர் ஜீ.எம்.பி.பி பெரேரா ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், பொறுப்பாசிரியர்களான எஸ்.யூ.விஜயராஜ், கே.எச்.பி. சத்துராணி, ஆர்.எம்.என். சந்தமினி, டபில்யூ.ஏ.எஸ். விக்ரமநாயக்க, ஈ.பி. ஆகாஷ் மதுவந்த ஆகியோரின் முயற்சியினால் இந்த வெற்றிகள் கிடைத்துள்ளன.


