JobVibe.lk - Sri Lanka Job Portal

நெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு இலங்கை கடற்படை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அவசியமான எரிபொருளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) எரிபொருள் தாங்கி வாகனங்களையும் பாதுகாப்பாகத் தீவுக்குக் கொண்டு செல்வதற்கான கடல் போக்குவரத்து வசதிகளை இலங்கை கடற்படை  வியாழக்கிழமை (2026 நவம்பர் 26) ஏற்படுத்திக் கொடுத்தது.

நெடுந்தீவை நிலையான சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் நெடுந்தீவின் போக்குவரத்துச் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பது எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், புதிதாக நிறுவப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குத் தேவையான எரிபொருளை ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி வாகனங்களை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நெடுந்தீவுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் கடல் போக்குவரத்துப் பணிகள், வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான 'ரணகஜ' மூலம் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு இலங்கை கடற்படை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், நெடுந்தீவின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும்.










Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال