JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வனஜீவராசிகள் பிராந்தியத்தின் ஐந்து காட்டு யானை கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு ஒற்றை கெப் ரக வாகனங்களை வழங்குவதற்கான நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் வனஜீவராசிகள் பிராந்தியத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, மகாகும்புக்கடவல, புத்தளம் மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய ஐந்து காட்டு யானை கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு ஒற்றை கெப் ரக வாகனங்களை வழங்குவதற்கானநிகழ்வு புத்தளம் உதவி வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்நிழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் வாகனப் பற்றாக்குறையின் காரணமாக, வனவிலங்கு அதிகாரிகள் தங்கள் பணிகளில் சிரமங்களை எதிர்கொண்டதோடு, அப்பணிகளை முறையாகச் செய்ய இயலாமலும் இருந்தனர்.

இந்தக் காட்டு யானை கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு இந்த வாகனங்களை வழங்குவதற்காகச் சுற்றுச்சூழல் அமைச்சு சுமார் ரூபா 90 இலட்சம் செலவிட்டுள்ளதுடன், அவற்றை வாங்கும் போது பாதுகாப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக, ஆனமடுவ பிரதேச சபையின் தலைவர் ஆலோக பண்டார, புத்தளம் மாவட்ட வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் பிரசாந்த விமலதாச மற்றும் வனவிலங்கு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال