எம்.யூ.எம்.சனூன்
அண்மையில் நடந்து முடிந்த தேசிய மட்ட இஸ்லாமிய தின போட்டியில் மாதம்பை அல் - மிஸ்பாஹ் பாடசாலையின் இரு மாணவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் மற்றும் பிரதி அதிபர் எஸ்.ஏ.எஸ். முனீர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் பொறுப்பாசிரியர்களான எம்.கே.சம்சாத் பேகம், எம்.யூ. அஸ்ரம், எம்.எஸ். நிஹ்லா, எப்.எம். பஹாத், யூ.எல்.எப்.ஹிமாயா ஆகியோரின் முயற்சியினால் இந்த வெற்றிகள் கிடைத்துள்ளன.
பிரிவு 01 பெண்களுக்கான கிராஅத் போட்டி நிகழ்ச்சியில் எம்.எஸ். ஸைனி என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தையும், பிரிவு 03 ஆண்களுக்கான அதான்போட்டி நிகழ்ச்சியில் ஏ. அப்ஹம் என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தையும் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.
