கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கன்னியமிக்க மூத்த உலமாக்களில் ஒருவரும் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளருமான அஷ்ஷெய்க் ஹனஸ் மொஹிதீன் (நளீமி) அவர்கள் இன்று (04) புதன்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் காலம் சென்ற ஹனீபா, உம்மு நஸீதா ஆகியோரின் அன்பு மகனும், சித்தி நளீபா அவர்களின் அன்புக் கணவரும், புத்தளம் ஜனாஸா நலன் புரிச் சங்க செயலாளர் ஆதிப், உஸாமா (நளீமி) வைத்தியர் ஹனான் (புத்தளம் தள வைத்தியசாலை), அம்ஹர் ஹுஸைன், நவால் ஹஸன் ஆகியோரின் அன்புத் தந்தையும், அஷ்ஷெய்க் இன்ஸாப் (இஸ்லாஹி), சப்னா, முனீரா, வைத்தியர் தாளியா, சுஜாத், மர்வா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (4) லுஹர் தொழுகையின்போது புத்தளம் பகா மஸ்ஜிதுக்கு கொண்டுவரப்பட்டு தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இவ்வாசிரியருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

