எம்.யூ.எம்.சனூன்
கஜுவத்தை முஸ்லிம் கனிஷ்ட வித்தியால தரம் 09 மாணவி எம்.என். ஸைனப், மாகாண மட்டத்தில் நடைபெற்ற அல்-குர்ஆன் ஓதல் கிராஅத் போட்டியில் முதலிடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
பாடசாலக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவி, ரெட்பானாவைச் சேர்ந்த நதீர் மௌலவி அவர்களின் செல்வப் புதல்வியாவார்.
இச்சிறப்பான வெற்றி அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் இறைவேதத்தின் மீதான ஆழ்ந்த பற்றுறுதியின் வெளிப்பாடாகும்.
அவரது இனிய கிராஅத் குரல் மாகாண மட்டத்தில் ஒலித்து பாடசாலையின் புகழை உயர்த்தியுள்ளது.
இந்த மகத்தான சாதனையைப் படைத்த மாணவி ஸைனப் அவர்களுக்கும், அவரை அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர், ஊக்கமளித்து உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிபர் எஸ்.எச்.எம்.சிபான் தெரிவித்துள்ளார்.
