JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பான ஒன்றுகூடல்.

எம்.யூ.எம்.சனூன்

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பான ஒன்றுகூடலும், கலந்துரையாடலும் அண்மையில் புத்தளம் கச்சேரி வீதி ஐஸ் டொக் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹமத்உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

நாட்டின் நிகழ்கால அபிவிருத்திகள், புத்தளத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் நலன் சார்ந்த விவகாரங்கள், சமூக முன்னேற்றம் மற்றும் புதிய மாற்றங்களுக்கான வாய்ப்புகள் குறித்து ஆக்க பூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இதன்போது இடம்பெற்றன.

மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, அறிவையும் அனுபவத்தையும் ஒன்றிணைத்து, சிறந்த சமூகத்தையும் முன்னேற்றமான புத்தளத்தையும் உருவாக்குவதற்கான ஒரு முக்கிய தளமாக இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال