JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் களிகம்பு போட்டியில் தேசிய மட்டத்தில் மூறாமிடம்.

 (புத்தளம் எம். யூ. எம். சனூன்)

இஸ்லாமிய கலை கலாச்சாரப் போட்டியில், புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்ட களிகம்பு போட்டியில் மூறாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்லார் (நளீமி) தெரிவித்தார்.

இந்த களிகம்பு போட்டியில் தொடர்ச்சியாக புத்தளம் வலயம், மாகாண மட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்று தமது திறமைகளை நிரூபித்த சமீரகம முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள், தேசிய மட்ட போட்டிக்கு பங்கு பற்றும் வாய்ப்பை பெற்றிருந்தனர். 

2016 ஆம் ஆண்டு தேசிய இஸ்லாமிய கலாச்சார கஸீதா போட்டியில் மூன்றாமிடத்தையும், 2017 ஆம் ஆண்டு தேசிய இஸ்லாமிய கலாச்சார கஸீதா போட்டியில் முதலாமிடத்தையும் பெற்றதுடன், இம்முறையும் தேசிய மட்டத்தில் மூறாமிடத்தைத் தக்கவைத்து மகத்தான சாதனையைப் படைத்துள்ளனர்.

இச்சாதனையைப் பெற்ற மாணவர்களுக்கு பாடசாலையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வெற்றிக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் வழி நடாத்தி, பயிற்சியளித்து தேசிய மட்டப் போட்டிக்கு அழைத்துச் சென்ற பிரதான பயிற்றுவிப்பாளர்  ஆசிரியர் எஸ்.எம்.எல்.எம். இஹ்ஜாஸ் அவர்களுக்கு பாடசாலையின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்லார் (நளீமி) தெரிவித்துள்ளார்.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال