JobVibe.lk - Sri Lanka Job Portal

வென்னப்புவ பகுதியில் பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்ற திடீர் விபத்தொன்றில் 24 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வென்னப்புவை – நைனாமடம் பிரதேசத்தில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றுடன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மோதிய வேகத்தில் வீசியெறியப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனர், படுகாயமடைந்த நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக வென்னப்புவை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர் மதுரங்குளி – கிவுல ஜனபதய பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே அசங்க மதுஷங்க பண்டார (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கவனக்குறைவான மற்றும் அஜாக்கிரதையான செலுத்துகையே இந்த விபரீதத்திற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.


இவ்விபத்தைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் வண்டியைத் தமது பொறுப்பில் எடுத்துள்ள வென்னப்புவை பொலிஸார், ஹபரணை – திரப்பன்கடவல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய அதன் சாரதியை உடனடியாகக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال