எம்.யூ.எம்.சனூன்
அண்மையில் நடந்து முடிந்த மாகாண மட்ட இஸ்லாமிய தின போட்டியில், மாதம்பை அல் - மிஸ்பாஹ் பாடசாலையின் இரு மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளார்கள்.
அதிபர் எஸ்.எல்.அன்வர் மற்றும் பிரதி அதிபர் எஸ்.ஏ.எஸ்.முனீர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், பொறுப்பாசிரியர்களான எம்.கே. சம்சாத் பேகம், எம்.யூ.அஸ்ரம், எம்.எஸ். நிஹ்லா, எப்.எம்.பஹாத், யூ.எல்.எப். ஹிமாயா ஆகியோரின் முயற்சியினால் இந்த வெற்றிகள் கிடைத்துள்ளன.
பிரிவு 01 பெண்களுக்கான கிராத் போட்டியில் எம்.எஸ்.ஸைனி என்ற மாணவியும், பிரிவு 03 ஆண்களுக்கான அதான் கூறும் போட்டியில் ஏ.அப்ஹம் என்ற மாணவரும் மாகாண மட்டத்தில் முதலாம் இடங்களை பெற்றுக்கொண்டு தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பிரிவு 01 ஆண்களுக்கான கிராத் போட்டியில் ஏ.ரய்யான் என்ற மாணவர் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் மற்றும் திறந்த போட்டி நிகழ்ச்சிகளான களிகம்பு போட்டி நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், சீனடிக்கலை போட்டி நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.



