JobVibe.lk - Sri Lanka Job Portal

'தித்வா' சூறாவளியினால் சேதமடைந்த கிழக்கு கடற்படை கட்டளையின் உட்கட்டமைப்பு வசதிகள் புனரமைக்கப்படுகின்றன

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

"தித்வா' சூறாவளி காரணமாக சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட திட்டத்தின் கீழ், கிழக்கு கடற்படை கட்டளையில் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு புனரமைப்புப் பணிகளுக்கு இணையாக, 'தித்வா' சூறாவளியினால் சேதமடைந்த இலங்கை கடற்படைக் கப்பலான ரன்வெலி நிறுவனத்தின் அதிகாரிகள் தங்குமிடத்திற்குப் பதிலாக புதிய அதிகாரிகள் தங்குமிடமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (30) கடற்படைப் பிரதிப் பிரதானியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, ‘தித்வா’ சூறாவளியினால் கிழக்கு கடற்படை கட்டளையில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்தப் புதிய அதிகாரிகள் தங்குமிடத்தின் மூலம், ரன்வெலி நிறுவனத்தின் அதிகாரிகளுக்கான நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

மேலும், இந்த நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதி தளபதி கொமடோர் சமிந்த குணரத்ன உள்ளிட்ட கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படைக் கப்பலான ரன்வெலி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் சமீர ரணவீர உள்ளிட்ட கடற்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال