JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை நீரிழிவு சம்மேளனம் ஏற்பாடு. புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை 5 ம் தர மாணவன் எம்.ஏ. அப்துல்லா கனிஷ்ட பிரிவு கவிதைப் போட்டியில் முதலிடம்.

எம்.யூ.எம்.சனூன்

நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலங்கை நீரிழிவு சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்கான பல்வேறுபட்ட ஆக்கப் போட்டியில், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில்

5 ம் தரத்தில் கற்கும் மாணவரான எம்.ஏ. அப்துல்லா, தமிழ் மொழி மூல கனிஷ்ட பிரிவு கவிதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தச் சிறந்த சாதனையைப் பாராட்டி, அவருக்கு ரூ. 25,000 ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் விழா, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள யூ.சி.எப்.எம். டவர் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமையை பெற்று வெற்றியடைந்த இம்மாணவரை பாடசாலை மட்டத்தில்  கௌரவிப்பதற்கான நிகழ்வு அண்மையில் பாடசாலை வளாகத்தில் அதிபர் எஸ்.ஆர்.முஹ்சி தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர் ஆசிரியர் தம்பதிகளான முஹம்மது அஜ்மல், பாத்திமா ஷகீலா தம்பதிகளின் புதல்வராவார்.













Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال