JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஷுஐபிய்யா அரபுக்கல்லூரிக்கு 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதி.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு அருகாமையில் இயங்கி வரும் ஷுஐபீய்யா அரபுக் கல்லூரிக்கு 2027 ம் ஆண்டுக்கானபுதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.

கல்லூரியின் பாடத்திட்டமானது அல்ஹாபிழ் கற்கை நெறி, அல் ஆலிம் கற்கை நெறி மற்றும் பாடசாலை கல்வி ஆகியனவாகும். தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது மற்றும் அரபு மொழி மூலம் வகுப்புகள் நடைபெறும்.

மாணவர்கள் பாடசாலை செல்வது போன்று, உள்ளூர் மாணவர்கள் காலை 07 மணிக்கு கல்லூரிக்கு சமூகம் அளித்து மாலை 05 மணிக்கு வீடு செல்ல அனுமதியளிக்கப்படல் கல்லூரியின் விசேட அம்சமாகும்.

வெளியூர் மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வியை தொடர வசதிகள் உள்ளன.

புதிதாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்கள், ஹிப்ழ் பிரிவுக்கு 10 வயதுக்குட்பட்டவர்களாகவும், ஷரீஆ பிரிவுக்கு 12 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், தேக ஆரோக்கியம் உள்ளவராகவும், அல் குர்ஆனின் அடிப்படையை  அறிந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 28 ம் திகதி காலை 08 மணி முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். கல்லூரியின் இலக்கு மார்க்கப் பற்றுள்ள துறை சார்ந்த சமூக பணியாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்குவதாகும்.

மேலதிக தொடர்புகளுக்கு

0758079874 அல்லது 0787756114 எனும் தொலைபேசி இலக்கத்தோடு அதிபருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.







1 Comments

  1. உருது மொழியை விட ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். கேட்டால் உருது மொழியும் ஹிந்தி மொழியும் ஒன்றுதான் என்பார்கள் அப்படி அல்ல உருது மொழி எழுத்து வடிவம் அரபி எழுத்தை ஒத்தது ஹிந்தி எழுத்து அதிலும் முற்றும் மாறுபட்டது. ஹிந்தி யும் உருதும் பேசும்போது ஒன்றாக தெரிந்தாலும் நிறைய வேறுபாடு உண்டு. ஆகவே ஹிந்தி மொழியை கற்கலாம்.

    ReplyDelete
Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال