JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சா/த மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள் - 2026.

 (புத்தளம் எம். யூ. எம். சனூன்)

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சா/த மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள் பாடசாலையில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பாடசாலையின் அதிபர் ஐ.என்.எம். எம்.லாஹிர் தெரிவித்தார்.

இக்கருத்தரங்குகளை "கத்தார் வாழ் கொத்தாந்தீவு சகோதரர்களின் அமைப்பு" 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக க.பொ.த சா/த பரீட்சை எழுதவிருக்கின்ற மாணவர்களின் நலன்கருதி வருடா வருடம் இலவசமாக நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் இம்முறையும், சுமார் ஒரு இலடசத்து நாற்பத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதியான செலவில் இந்த இலவசக் கருத்தரங்கை குறித்த இந்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.

இவ்வமைப்புக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர், மாணவியர் சங்கம் சார்பாக தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிபர்  தெரிவித்துள்ளார்.










Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال