எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் வட்டக்கண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பன அண்மையிலே (27) பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.ஆர்.எம்.ரம்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஆர்.பிரபாகரன் கலந்து கொண்டார்.
பாடசாலைக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் ஏ.ஹபீல், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றார்கள் மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்த பாத்திமா ஹம்தா (143) சரூபி சமீஹ் (138) அசாம் யூசுப் (136) ஆகிய மாணவர்கள் இதன் போது விசேட பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இது தவிர 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் இதன் போது பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை வரலாற்றிலே 2026 ஆம் ஆண்டு 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொள்ப்பட்ட மாணவர்களுடைய விகிதாசாரம் 87 சத வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.ஆர்.எம். ரம்சின் பெருமைப்பட தெரிவித்தார்.






