(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கையிலுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் சட்டவிரோத குடியேற்ற ஒருங்கிணைப்பு அதிகாரி திருமதி Sonya Douglas உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக திங்கட்கிழமை (2026 ஒக்டோபர் 26) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அக்கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தனவை சந்தித்தார்.
அதற்கமைய, வட மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றப் போக்குகள், கடல்சார் எல்லை பாதுகாப்பு, மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தக்கூடிய துறைகள் குறித்தும் இவ்வுத்தியோகபூர்வ சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.




