எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாநகர சபையின் பொதுசன நூலகத்துக்காக 2026 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய நூல்களைக் காட்சிப்படுத்தும் விசேட புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை (15) புத்தளம் பொதுசன நூலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொதுசன நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாதின் வழிகாட்டலில், நூலகத்தின் ஊழியர்களால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் மற்றும் நகர சபையின் ஆணையாளர் ரழியுதீன் ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டு, கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
நூலகத்துக்கு புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நூல்களை அதிதிகள் இதன்போது பார்வையிட்டனர்.
வாசகர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும், அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதற்கும் இவ்வாறான நூல் கண்காட்சிகள் பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளது என மேயர் ரின்சாத் அஹ்மத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புபுத்தளம் மாநகர சபையின் ஊழியர்கள், நூலக ஊழியர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புத்தளம் பொதுசன நூலகத்துக்கு வருகை தந்து புதிதாக இணைக்கப்பட்ட நூல்களைப் பார்வையிட்டுப் பயனடையுமாறு அனைத்துப் புத்தகப் பிரியர்களுக்கும் நூலகர் கே.எம்.நிஷாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





