JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆனமடு பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு விரிவான தீர்வு.

எம்.யூ.எம்.சனூன்

ஆனமடு பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு விரிவான மற்றும் நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில், ஆனமடு பிரதேச செயலகத்தில் அண்மையில் (14)  சிறப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வலுவான சூரிய சக்தியால் இயங்கும் மின்சார யானை வேலி அமைத்தல், களக் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவுதல், இதற்காக முழுமையான அரசாங்க நிதியை ஒதுக்குதல், மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் உணவு மற்றும் நீர் வசதிகளை வளப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முனை அணுகுமுறை குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.

ஆனமடு பகுதியில் யானை - மனித மோதலைத் தீர்ப்பதில், பௌதீகத் தடைகளை அமைத்தல், எல்லைகளை வலுப்படுத்துதல், களக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவுதல், மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களில் உணவு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு பன்முனை அணுகுமுறையில் அரசாங்கத்தின் கவனம் உள்ளது என்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதும், இயற்கை சரணாலயங்களில் வனவிலங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுமே அரசாங்கத்தின் இறுதி இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனமடு ராஜவன்னி குமாரவன்னி  பிரதம நீதி சங்கநாயக்க, ஸ்ரீ சரணங்கர பிரிவேனாவின் பிரதம பொறுப்பாளர் வடத்தே சோமானந்த தேரர், ஆனமடு பிரதேச சபையின் தலைவர் ஆலோக பண்டார, ஆனமடு பிரதேச செயலாளர் லக்மால் விஜேசிங்க மற்றும் அரசாங்க அதிகாரிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.










Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال