JobVibe.lk - Sri Lanka Job Portal

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படை தயார் நிலையில்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கை கடற்படையின் 171 பேரிடர் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், செவ்வாய்க்கிழமை (2026 ஒக்டோபர் 27) நிலவரப்படி, 17 பேரிடர் நிவாரணக் குழுக்கள் சபரகமுவ, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையினால் இரத்தினபுரி பிரதேசத்தில் மூன்று (03) குழுக்களும், யட்டியந்தோட்டை பிரதேசத்தில் இரண்டு (02) குழுக்களும், மீதொட்டமுல்ல, நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் தலா ஒரு குழு வீதம் நான்கு (04) குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.  

மேலும், வடமேற்கு கடற்படை கட்டளையினால் புத்தளம் பிரதேசத்தில் இரண்டு (02) குழுக்களும், நிக்கவெரட்டிய, குருநாகல் மற்றும் நீலபெம்ம ஆகிய பிரதேசங்களில் தலா ஒரு குழு வீதம் மூன்று (03) குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையினால் தவலம பிரதேசத்தில் ஒரு (01) குழுவும், கிழக்கு கடற்படை கட்டளையினால் திகன்பத்தான பிரதேசத்தில் இரண்டு (02) பேரிடர் நிவாரணக் குழுக்களும், தேவைக்கேற்ப பணியில் ஈடுபடுத்துவதற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال