எம்.யூ.எம்.சனூன்
ரம்ய லங்கா அமைப்பின் முந்தல் கிளையின் ஏற்பாட்டில், முந்தல் ஆதார வைத்தியசாலையின் தொற்றா நோய்கள் பிரிவின் பங்களிப்புடன், ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் திங்கட்கிழமை (19) கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் சமீரகம பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனைடைந்தனர்.
இந்நிகழ்வில் ரம்ய லங்கா அமைப்பின் தேசிய அமைப்பாளர் டீ.எம்.ஏ. அலிசப்ரி, முந்தல் கிளை ஒருங்கிணைப்பாளர் பஸ்லுல் அன்பஸ், முந்தல் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் பிரியங்கர ஆகியோரின் தலைமையில் ரம்ய லங்கா முந்தல் கிளையின் தன்னார்வத் தொண்டர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இம்மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய கனமூலை பாடசாலை அதிபர் பீ.எம். முஸ்னி மற்றும் சமீரகம பாடசாலை அதிபர் மிஹ்லார் (நளீமி) ஆகியோருக்கு "ரம்ய லங்கா" அமைப்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.











புத்தள மாவட்டத்தை இரண்டாக பிரித்து முந்தளையும் ஒரு மாவட்டமாக அறிவித்ததற்கு மக்கள் சார்பாக மதுரங்குளி மீடியாவுக்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete