JobVibe.lk - Sri Lanka Job Portal

குருணாகலில் "திறமை திலகம் விருது விழா" சிறப்பாக நடைபெற்றது.

எம்.யூ.எம்.சனூன்

இன்ஸ் ஒன்லைன் கல்லூரி நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் நிர்வாகத் தலைவி நஜா சப்ரூஸ் தலைமையில், திறமைத் திலகம் விருது வழங்கும் விழா, அண்மையில் (24) குருணாகல் மலியதேவா கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களின் திறமைகள், ஆற்றல்கள் மற்றும் சாதனைகளை அங்கீகரித்து, அவர்களை எதிர்காலத்தில் மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சுமார் 130 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக எப்.என்.மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் உரிமையாளரும், கேப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் சிரச தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் குருணாகல் மாவட்ட நிருபரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குழும பணிப்பாளருமான ஏ.டபில்யூ. எம்.பஸ்லான், துபாய் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள மொழிபெயர்ப்பாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் உலகளாவிய சமாதானத் தூதுவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளருமான முஹம்மது நஸ்லீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அதேவேளை, பெண்கள் கலை அகடமியின் நிறுவுனரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பாத்திமா சப்ரினா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களின் சாதனைகளைப் பாராட்டி, எதிர்கால வெற்றிகளுக்கான ஊக்கத்தை வழங்கும் நோக்கில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்களின் பல்வேறு திறமைகளையும் ஆற்றல்களையும் பாராட்டி விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

இதன்போது, மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகள், படைப்பாற்றல் மற்றும் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பல்திறன் சார்ந்த நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

மாணவர்கள் தங்களது திறமைகளைத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தி நிகழ்வுகளில் பங்கேற்றமை விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக அமைந்தது.

இந்நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஊடாக முன்னெடுக்கப்படும் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலைப் புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்துவதும் இச்சமூகநலத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

மாணவர்களின் திறமைகளை அங்கீகரித்து அவர்களுக்குரிய கௌரவத்தை வழங்குவதுடன், கல்விக்கான உதவிகளையும் ஒருங்கிணைத்த இந்நிகழ்வு, கல்வி வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் இடையிலான முக்கிய தொடர்பை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்தது.












Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال