JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வாண்மை விருத்தி நிலையத்தின் களப்பயணம் திருகோணமலைக்கு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கல்வி வலயத் தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில் அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோருக்கான  கல்விக் களப் பயணம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி A. Aska அவர்களின் தலைமையில்  புதன்கிழமை(21) இடம் பெற்றது.            

இதில் ஓர் அங்கமாக, திருகோணமலை கோணேஷ்வரா இந்து மத்திய கல்லூரி மற்றும் திருமலை சென்மேரிஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்குச் விஜயம் செய்து கல்விச் செயற்பாடுகள், பாடசாலை முகாமைத்துவம், விஷேட வேலைத் திட்டங்கள் மற்றும் சிறந்த கல்வி அனுபவங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள  வாய்ப்பளிக்கப்பட்டது.

இக்களப் பயணம் அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களிடையே அனுபவப் பகிர்வு, புதிய கல்விச் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளுதல், சிறந்த நடைமுறைகளைக் கற்றுக் கொள்ளுதல் மற்றும் புத்தளம் கல்வி வலயத்தின் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்தது.

கல்வி அனுபவங்களைப் பகிர்ந்து, புதிய சிந்தனைகளையும் சிறந்த நடைமுறைகளையும் உள்வாங்கி, புத்தளம் கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் பயனுள்ள களப்பயணமாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال