JobVibe.lk - Sri Lanka Job Portal

நாத்தாண்டியவில் கல்வி மற்றும் ஆங்கில மொழித் திறன்களை ஊக்குவிக்கும் சிறப்பு நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

எக்ஸஸ் ஆங்கில அகடமி ஏற்பாட்டில்  நாத்தாண்டிய நகர மண்டபத்தில்,  கல்வி மற்றும் ஆங்கில மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சிறப்பு நிகழ்வு அண்மையில் (17) நடைபெற்றது. 

ஆசிரியை ரிஸ்வான் ஹம்சியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்விசார் சாதனைகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, எம்.ஜே.எம்.பைசல் மற்றும் ஹிருணி விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், நாத்தாண்டிய பிரதேச சபைத் தலைவர் சாகர குமார விஜேசேகர, நாத்தாண்டியா பிரதேச  செயலாளர் டபில்யூ.ஏ.எஸ்.சீ.ஜீ. ஜன்சா, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான பிரதிநிதி எப்.ஷிரீன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

அத்துடன், கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்.ஜே.மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ஸ்தாபகருமான ஏ.முஹம்மது இன்சாப், Saray Engineering and Construction நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.டபில்யூ.எம்.ரஹீம் மற்றும் ஸ்கில் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.டபில்யூ.எம்.இக்ராம் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

எப்.என்.மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் உரிமையாளரும், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் சிரச தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் குருணாகல் மாவட்ட நிருபருமான ஊடகவியலாளர் ஏ.டபில்யூ.எம்.பஸ்லானும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மாணவர்களின் கல்விசார் சாதனைகளைப் பாராட்டுவதுடன், எதிர்காலத்தில் மேலும் சிறப்பாகக் கல்வி கற்க அவர்களை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாக அமைந்தது.

அதேபோன்று, ஆங்கிலக் கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ஏனைய விருதுகள் வழங்கப்பட்டன. ஆங்கில மொழிக் கல்வியில் அவர்கள் பெற்ற முன்னேற்றத்தையும் திறமைகளையும் அங்கீகரிக்கும் வகையில் இக்கௌரவிப்புகள் இடம்பெற்றன.

மேலும், பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குக் கிண்ணங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

இப்போட்டிகள் மாணவர்களின் ஆங்கில மொழிப் பயன்பாடு, வாசிப்புத் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் மனனத் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்தன. இத்தகைய பாராட்டு நிகழ்வுகள் மாணவர்களிடையே தன்னம்பிக்கை, ஆர்வம் மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதற்கும் பங்களிக்கின்றன.

இதனுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال