JobVibe.lk - Sri Lanka Job Portal

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை மாற்றம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 9467 பேர் பாதிப்பு!. ஒருவர் உயிரிழப்பு!.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக தொடர்ந்து பேய்து வரும் மழை மற்றும் வெள்ள அனார்த்ததினால் இதுவரை  புத்தளம் மாவட்டத்தில் உள்ள 08 பிரதேச செயலகத்தின் 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 2475 குடும்பங்களின் 9467 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அணார்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட காரியாலயம்  2026/10/26 பிற்பகல் 01 வரையான காலப் பகுதியில் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

அதன்படி புத்தளம் மாவட்டத்தில் வணாத்தவில்லு பிரதேச செயலகத்தில் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 1301 குடும்பங்களின் 5078 பேரும், புத்தளம் பிரதேச செயலகத்தில் 06 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 746 குடும்பங்களின் 2964 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகத்தில் 02 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 144 குடும்பங்களின் 498 பேரும்,  மஹவெவ பிரதேச செயலகத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 98 குடும்பங்களின் 321 பேரும்,  மாதம்பே பிரதேச செயலகத்தின் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 85 குடும்பங்களின் 279 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலகத்தின் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 67 குடும்பங்களில் 202 பேரும், சிலாபம் பிரதேச செயலகத்தின் 02 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 21 குடும்பங்களில் 63 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 13 குடும்பங்களின்  62 பேரும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال