JobVibe.lk - Sri Lanka Job Portal

கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சின் நாட்டாரியலுக்கான வித்தகர் விருது - 2026 இனை சுவீகரித்துக் கொண்டார் சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் அபூபக்கர் இஸ்ஸதீன்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருதில் "கோலாட்டம்" எனும் பொல்லடிக் கலையை முறையாகப் பயின்று, சிறந்த முறையில் அதனை வளர்ந்து வரும் இளம் பொல்லடிக் கலைஞர்களுக்கு பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் சிரேஷ்ட அண்ணாவியார் அபூபக்கர் இஸ்ஸதீன் நாட்டாரியலுக்கான வித்தகர் விருது - 2026 விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

தனது சிறுவயது முதல் இக்கலைக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் இவர், சாய்ந்தமருதில் இடம்பெறும் எந்த நிகழ்வுகளிலும் "பொல்லடி" எனும் பாரம்பரியக் கலையை வழங்கி, அக்கலையை மழுங்கடிக்கவிடாது உயிரோட்டம் கொடுத்து வருகிறார். 

இக்கலைக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து, தனது திறமைகளை வெளிக்காட்டி வரும் இவர், நிறைய பொல்லடி அடிகளைப் புதிதாகக் கண்டுபிடித்தும் பொல்லடிக்கே உரித்தான நாட்டுப்புறப் பாடல்களுக்கு மேலதிகமாக பொல்லடி அடிகளுக்கேற்ப சினிமாப் பாடல்களையும் பாடி சபையோரை பரவசப்படுத்துவதில் சாய்ந்தமருதில் இவரை மிஞ்ச யாருமில்லை என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

மிகச் சிறந்த இக்கலைஞருக்கு நாட்டாரியலுக்கான வித்தகர்விருது - 2026 அரச விருது கிடைப்பதையிட்டு கலை உலகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.




1 Comments

  1. அன்னாவியார் எதோ சூனியம் செய்து விருதை தட்டி கொண்டார் போலும்

    ReplyDelete
Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال