JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி சம்மாட்டிவாடியில் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு...!.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் சம்மாட்டிவாடி கிராமத்தில் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வியாழக்கிழமை (10) சம்மாட்டிவாடி அல் அரபா நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் கருத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் சம்மாட்டிவாடி கிராமத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்படும் குடி நீர் பிரச்சினைக்கான தீர்வாக குடிநீர் தாங்கி அமைப்பதற்கான நிதி  பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கற்பிட்டி பிரதேச சபையின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸ், உப தவிசாளர் சமன் குமார ஹேரத், பிரதேச சபை உறுப்பினர் டி.எம் இப்ஹாம் கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال